இளநீர்

By , May 15, 2012 4:54 am

இயற்கை தரும் பரிசு-இளநீர்;

இனிய பானம் இளநீர்,பிணிகளை நீக்கும் சுவைநீர் இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும். இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்.. பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து. உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARYINFECTION; போன்ற கோளாறுகள் வந்துவிட்டால்முதல் மருந்தே இளநீர் தான். கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடியஇனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண்,ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தருமஇளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி. டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமேசாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைபபுண் OPERATION SORE சீக்கிரம் ஆறிவிடும்.. உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால்ஜீரண உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தானது கோடையின் கொடுமையைத் தணிக்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம்.

தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மையும் கொண்டது. மனித உடலில் அதிக அளவு நீர்ச்சத்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இளநீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும். இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இளநீரில் ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு இளங்காய்களில் நீர்;: ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63. இளநீரின் பயன்கள். இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும். இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது. இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது. இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது. மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது. இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப்போம்.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

By , April 18, 2012 7:28 am

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’ செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கிட்னி கற்கள்

By , April 17, 2012 5:49 am

கிட்னி கற்கள் யாருக்கு வரும்?**** “அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை”. பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது. இது உண்மைதானா? நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது. கிட்னி கல் என்றால் என்ன? சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.

அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன. கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்: கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tract infections), சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும். யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு. நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது

ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கிட்னி கல் – அறிகுறிகள் சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்-ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களை ஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம்.

இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். ஆராய்ச்சியின் முடிவுகள் Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் : மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று:- Health professionals follow up study 45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு இரண்டு:- Nurses Health study I 94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.

மூன்று:- Nurses Health study II 1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர். இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில், 1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. 2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. 3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது. 4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது. 5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல் 6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். 7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். 8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes), சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர். நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது:– மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும். முக்கியமாக அதிக தண்¬ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீ¬ர் அருந்த வேண்டும். பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை. புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

 

நரம்பு நோய்களுக்கு செலரி சாறு

By , March 17, 2012 3:57 am

நரம்பு நோய்களுக்கு செலரி சாறு

செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

தமிழ்ழின் சரித்திரம் (History of Tamil)

By , February 11, 2012 6:59 am

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 – 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 – 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 – 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 – 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 – 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 – 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு – 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு – 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு – 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு – 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு – 3100 – 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு – 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு – 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு – 2000 – 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி.

கி.மு – 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. – 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. – 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. – 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 – 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 – 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 – 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 – 270

மகன் இமயவரம்பன் – நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் – கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் – மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 – 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்டு தமிழா….

என்ன தவம் செயதேனடா தமிழனாய் பிறந்ததற்கு !

உலக மொழிகளில் உன்னத மொழி எனது தாய் மொழி தமிழ்……

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழ் உலக வரலாறு!

 

 

நினைவில் நீங்காத பழையவை!

By , February 11, 2012 6:45 am

தமிழர்கள்? சிலர் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலத்தை தமிழுடன் கலந்து பேசுவதை பெருமையாக நினைப்பதற்கு இதுவும் காரணமாக ( அடிமை வாழ்வின் சின்னமாக) இருக்குமா? இத்துடன் இணைக்கப்பட்ட படத்தையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய்யுங்கள்.

அமில மழை

By , February 8, 2012 2:26 am

அமில மழை பொழிவதற்கான காரணம் என்னவென்று அறியலாம்…

வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. அடிக்கடி குமுறும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களின் நொதிவு ஆகியவையும் வானத்தில் வீரிய அமிலத் தன்மையை உண்டாக்குகின்றன.

தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன.

அந்தப் பிரதேசங்களில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவர இனங்களும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

“குமரிப் பெருங்கண்டம்”

By , February 8, 2012 2:17 am

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

By , February 6, 2012 7:26 am

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

By , February 6, 2012 2:19 am

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.